பிரதம பொலிஸ் பரிசோதகராக (CI) கலாநிதி எஸ்.எம். சதாத் பதவி உயர்வு.!

முஹம்மட் ஜெலீல்-
ம்பாறை மாவட்டத்திலுள்ள மகாஓயா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக (IP) கடமையாற்றும் நிந்தவூர் 4ம், பிரிவில் வசிக்கும் கலாநிதி அல்-ஹாஜ் எஸ்.எம். சதாத் அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக (CI) பதவி உயர்வு பெற்று 08-05-2020ம், திகதி தனது பதவியை பொறுப்பேற்று நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேத்துள்ளார்.
31 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் உளவியல் துறையிலும், குற்றவியல் தகவல் தொழினுட்பத்திலும் டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளார்.

மேலும் இவரது சேவைக்காலத்தில் கல்முனை, அக்கரைப்பற்று, வாழைச்சேனை,மொனராகல, கொழும்பு, திருக்கோவில் ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியதுடன் அக்காலங்களில் விசேட குற்றப்புலனாய்வு (SCIP), பெருங் குற்றப்புலனாய்வு (Crime ) சிறு குற்றப்புலனாய்வு (MO) பிரிவு, போக்குவரத்து பிரிவு (motor traffic) சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு, கொழும்பு கொகுவல Model Police ஆகிய பிரிவுகளில் பொறுப்திகாரியாகவும் கொழும்பு Mountlaniya Division யில், Section of Enforcement of Law எனும் பிரிவுக்கு பொறுப்பதியாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளராக இருக்கும் இவரின் சேவைகளைப் பாராட்டி சாமஸ்ரீ தேசமான்ய, தேச பந்து,  தேச கீர்த்தி, போன்ற இன்னும் பல்வேறு பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ள இவர் 2014ம், ஆண்டுக்கான தேசிய சமாதான சங்கத்தில் National Excellency Award and Gold Medal பெற்றதோடு அவ்வாண்டில் சமூக சேவைக்கான தங்கப் பதக்கத்தினை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் கௌரவ தி.மு. ஜயரட்ன அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் மர்ஹூம் வெள்ளக்குட்டி சம்சுதீன் (டைலர்) மற்றும் முஹம்மது தம்பி றாவியா ஆகியோர்களின் மூத்த மகனுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -