கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்ய அரசு முன்வரவேண்டும். அஸ்வான் மௌலானா


பி.எம்.எம்.ஏ.காதர்-
கொரோனா தாக்கத்தினால் இறந்து வரும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சாய்ந்தமருது “மருதம் கலைக் கூடலின்” தலைவர் அஸ்வான் மௌலானா கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது இஸ்லாம் மார்க்கம் புனிதமான மார்க்கமாகும் இந்த மார்க்கத்தில் இறந்த ஜனாஸாவை எரிப்பது என்பது முஸ்லிம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்டது என்று சொல்கிற போது எங்களுக்குள்ளே நாங்கள் தாங்க முடியாமல் தவிக்கின்றோம்.
கெளரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே நானும் இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் .மனிதாபிமான அடிப்படையில் .சிரம் தாழ்த்தி தங்களிடம் கேட்டுக் கொள்வது.கொரோனா தாக்கத்தினால் இறந்து வரும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள்.
உலகலாவீய ரீதியில் கொரோனா பாதிப்பினால் இறந்து வரும் இஸ்லாமிய ஜனாஸாக்களை அடக்கம் செய்து வரும் இந்த வேளையில் எமது நாட்டில் மட்டும் ஏன் எரிக்க வேண்டும். கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமராகிய நீங்கள் அனைத்து இன மதங்களையும் ஒற்றுமையுடனும் நன்மதிப் போடும் கொண்டு செல்லும் இவ்வேளையில். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய சமயத்திற்கு முரண்பாடாக எரிப்பது நியாமாகாது.
இந்த நாட்டை ஆளக்கூடிய தைரியமும் வல்லமையும் தாங்களிடமே உண்டு என்று அறிந்துதான் இறைவன் உங்களிடம் இந்த நாட்டை பொறுப்புடன் தந்துள்ளான். நாட்டில் எதுவிதமான பிரட்சினையுமின்றி.சுகமுமான முறையில் கொண்டு செல்வதை நாங்கள் அறிகின்றோம். பல ஆண்டு காலம் தாங்களே இந்த நாட்டை ஆளக்கூடிய சக்தி உங்களிடமே உள்ளது .
எனவே இந்த சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம்களையும் ஒட்டு மொத்தமாக அரவனைக்க தயவுடனும் பண்புடனும் நான் ஒரு பொது மகன் என்ற வகையில் கேட்டுக் கொள்வதோடு நான் முப்பது வருட காலம் ஐ.தே.கட்சியில் இருந்து ஐ.தே.கட்சி இந்த நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்வார்கள் இந்த நாட்டுக்கு ஜ.தே.கட்சி ஒரு காலமும் வேண்டாம் என்று உதறித் தள்ளி எறிந்து விட்டு உங்களோடு நான் பயனிக்க வந்துள்ளேன் .
எனக்கும் இது பற்றிய சம்பவங்களை கேட்பதற்கான உரிமை உண்டு என்று உங்களிடம் மன்றாடி கேட்கின்றேன் எங்களுடைய ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இல்லாமல் அதை அடக்கம் செய்ய அனுமதி தாருங்கள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -