மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஐ. ஏ. காதிர் கான்-

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால், மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று, தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக, தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இவ்வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 18,500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாட்டங்களில் பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 மாதங்களில் கொழும்பில் 2685 பேரும், கம்பஹாவில் 1580 பேரும், களுத்துறையில் 913 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -