போதைப் பொருள் பாவனையை ஒழித்து பொருளாதார மேம்பாட்டுக்கு புதியதிட்டம்!


அறிமுகம் செய்யப்படும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்




'மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு வறியகுடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, யாசகம் கேட்கச் செல்லும் நிலைமையை இல்லாது செய்யவும் வழி வகைகள் மேற்கொள்ளப்படும் இதற்கான துரித திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன்'

இவ்வாறு கூறுகின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராகக் களம் இறங்கி யுள்ள ஹாபிஸ் நஸீர் அஹமட்.

இது குறித்து அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

'போதைப் பொருள் பாவனையை ஒழித்து பொருளாதாரப் புரட்சி' எனும் தொனிப் பொருளில் துரித திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவணை காரணமாக பல குடும்பங் கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றன.

நாளாந்தம் உழைப்போர்; பல்வேறுவகையான போதைப்பொருள்களின் பாவனைக்குள் தம்மை அடிமைப்படுத்தி தமது வாழ்வை கேள்விகுறியாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்படும் குடும்ப சண்டை- சச்சரவுகளால் அவர்களது இல்லற வாழ்வு சிதைந்து, விவாகரத்து வரை செல்லும் நிலைமைகளும் ஏற்படுகி ன்றன. இதுமட்டுமின்றி இவ்வாறான பின்னணியில் வளரும் பிள்ளைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் நாம் பார்க்கின் றோம்.

நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் வடுக்களிலிருந்து இன்னும் முற்றாக மீள முடியாத குடும்பங்கள் பலவற்றில் போதைப்பொருள் பாவனை பெரும் அவலங்களை ஏற்படுத்திவருகின்றது. அதன்காரணமாக விரக்திக்குள்ளாகும் பெண்கள் தமது வாழ் வை தொலைத்துக் கொள்ளும் முடிவுகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவர்களது குழந்தைகள் போஷாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், கல்வியில் நாட்டமின்மை போன்ற அவலங்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, இவற்றை எல்லாம் இல்லாமல் செய்து, 'ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கையை' ஏற்படுத்த, போதைப்பொருள் பாவனையை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கான திட்டத்தை நான் அறிமுகப்படுத்தி அதனூடாக குடும்பங்க ளைக் கண்காணித்தல், எச்சரிக்கைவிடுத்தல், மதுப்பழக்கத்தை கைவிட்டோருக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குதல், விஷேட விழிப்புணர்வு வழிகாட்டல்களை வழிநட த்தல் போன்ற செய்முறைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதனை நாம் அரச அங்கீகாரத்துடன் முறையாக வழிநடத்த வேண்டும். இதுபோன்ற இன்னும் பல திட்டங்களை நான் செயற்படுத்தி அபிவிருத்தி பணிகளில் புதிய இலக்குகளைத் தொட தயாராக இருக்கின்றேன். இதற்கான அங்கீகாரத்தை உங்களிடம் இருந்து பெறவே இம்முறை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன் இதற்கான அங்கீகாரத்தை தரவேண்டியது உங்கள் பொறுப்பே - என்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -