அரசகாணிகளை அநீதியாக கையளிக்க எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!


திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தன்னிலை விளக்கம்.
காரைதீவு சகா-
திருக்கோவில் பிரதேசத்தில் அரசகாணிகளை அரசகாணிக்கட்டளைச் சட்டத்திற்கு முரணாக பொருத்தமற்ற நபர்களுக்கு பகிர்ந்தளிக்க எந்தவொரு ஏற்பாடும் எமது பிரதேசசெயலகத்தினால் முன்னெடுக்கப்படவில்லையென்பதை இத்தால் தெரிவிக்கவிரும்புகிறேன்.

இவ்வாறு திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் விடுத்துள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சிலதினங்களாக சில சமுகவலைத்தளங்களில் திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் அரசகாணிகள் பொருத்தமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவருவதாக உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளிவந்திருந்தன.

அதுதொடர்பாக உலகத்திற்கு சரியான தகவலை தெரியப்படுத்துமுகமாக திருக்கோவில் பிரதேசத்திற்குரிய பிரதேசசெயலாளர் என்றவகையில் இத்தன்னிலை விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அண்மையிலேற்பட்ட கொரொனா தொற்றுக்காரணமாக நாட்டிலேற்பட்டுள்ள அசாதார சூழ்நிலைகருதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாயராஜபக்சவின் வழிகாட்டலுக்கமைவாக உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயத்திணைக்களம் சௌபாக்யா என்றதிட்டத்தையும் மேலும்பல விவசாய உற்பத்தி மேம்பாட்டுத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை அரசின் சுற்றுநிருபத்திற்கமைவாக தரிசுநிலங்களாக கைவிடப்பட்ட வெற்றுக்காணிகளையும் வளவுகளையும் விவசாயப்பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராமசேவையாளர் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மேலும் இதனோடு இணைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் எண்ணக்கருவிலுருவான கிராமசக்தி வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 25ஏக்கர் அரசகாணியில் மக்களை விவசாய உற்பத்தியிலீடுபடுத்துவதற்கான நடவடிக்கையும் என்னால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளi சிலர் தவறாகப்புரிந்துகொண்டு என்மீதும் அரசின்மீதும் களங்கத்தை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். தவறான பதிவுகளை இட்டுள்ளனர்.

எனவே அப்படியில்லாமல் மேற்சொன்ன நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்கு மாறாக அநீதியானமுறையில் எதுவும் நடைபெறாது என்பதை இத்தால் தெரியப்படுத்துகிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -