பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தேர்தலில் தோல்வியடைவார்


பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குறித்து நான் எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை ஏனென்றால் ஏற்கனவே நான் அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைவார் என கூறி இருக்கிறேன் இதனை அவர் உணர்ந்திருக்கிறார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பகுதியில் புதன்கிழமை(13) முற்பகல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குறித்து நான் எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை ஏனென்றால் ஏற்கனவே நான் அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைவார் என கூறி இருக்கிறேன் இதனை அவர் உணர்ந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தளவில் நான் எந்த எந்த ஒரு அரசியல்வாதியை பற்றியும் தூற்றுவதில்லை நாங்கள் புதுமை படைப்பதற்காக தான் மக்கள் மத்தியில் வந்து இருக்கின்றோம்.மக்கள் மத்தியில் நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் எங்கள் கொள்கை பாடுகளை மக்களுக்கு தெளிவு எடுத்துக்கொண்டு அதனை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் விமர்சனம் என்பது அரசியலில் சாதாரணமானதுஎன்னைப் பொறுத்தளவில் எனனை விமர்சிப்பவர்களை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -