அல் ஹித்மதுல் உம்மா நிறுவனத்தினால் கொரோனா (கொவிட்19 ) தொற்று காரணமாக தொழிலின்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வில்வெளி ஜும்ஆப் பள்ளி வாசல் மண்டபத்தில் நேற்று வழங்கி வைக்கப் பட்டன.
நாளாந்த வருமானம் குறைந்த 150 குடும்பங்களுக்கு முன்னாள் கிண்ணியா நகர சபைத் தவிசாளரும் டொக்டரும் சட்டத்தரணியுமான ஹில்மி மகரூப்,அல் ஹித்மதுல் உம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் முகம்மட் பாத்திஹ் ஹஸ்ஸாலி ஆகியோர் இவ் உலர் நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.
இந் நிறுவனம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தொழில் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
