தபால் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்கள் - விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிப்பு


பாராளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும்; வாக்காளர் தமது வாக்காளர் அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூலம் வாக்களிகும் வாக்களர்கள் தங்களது வாக்காளர் அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை நாளை மறுதினம் அதாவது எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4 மணி வரை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலங்களிலும் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக அவகாசம் வழங்கியிருந்த போதிலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -