வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உட்பத்தி ஆரம்பம்....

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

டந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆட்சியில் இன்று பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார்.

பல வருடங்கலாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆலோசனைக்கமையவும் பிரதமர் மஹிந்தராஜபக்ஸவின் வழிகாட்டலிலும் இன்று பரீட்சாத்த நடவடிக்கையாக அட்டை தயாரிக்கும் இயந்திரம் இயங்க வைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த றிஸாட் பதியுதீனிடம் இவ் ஆலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு கடதாசி ஆலையின் ஊழியர்கள் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டும் அது பலன் இல்லாமல்போன நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சியினால் இன்று பரீட்சாத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் தொடராக கடதாசி ஆலை முழுமையாக இயங்கப்படவுள்ளதுடன் வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்கடதாசி ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க, அமைச்சின் உயர் அதிகாரிகள், வாழைச்சேனை கடதாசி ஆலையின் பதில் முகாமையாளர் எஸ்.அம்பிகாவதி உள்ளிட்ட பலர் பலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -