தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

பாறுக் ஷிஹான்-

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையில் இருப்பதை விடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் மாத்திரம் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை (21) முற்பகல் மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற வேளை சபையில் பல உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டதாவது

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் இருப்பார்கள் ஆயின் அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையிலோ இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்தி தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் கட்டாய விடுமுறையை குறித்த தேர்தல் இடம் பெறும் காலம் வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளருக்கு சபையின் விடுமுறைக்காக அங்கிகாரத்தை பெற்று உரிய தரப்பின் ஊடாக அதை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

இதனடிப்படையில் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தொடரில் சில வேட்பாளர்கள் விடுமுறைக்கான கடிதத்தை உரிய முறையில் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களில் சுமார் நால்வர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பல்வேறு தரப்பில் போட்டியிடுவதாக விடுமுறைக்கு அறிக்கை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -