எச்.எம்.எம்.பர்ஸான்-
யுவதி ஒருவரை பாலியல் சேட்டை செய்த நபரை கைது செய்யுமாறுக் கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய யுவதி ஒருவரின் தாய் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் சென்றதை அவதானித்த அப்பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யுவதியிடம் பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.
யுவதி தனிமையில் தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த நபர் கட்டிப்பிடித்து பாலியல் சேட்டை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிமையில் இருந்த யுவதி கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
