திருமலை ,மொரவெவ பிரதேசத்தில் தேன் எடுப்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் மரணம்


எம்.ஏ.முகமட்-
திருமலை மொரவெவ பொலிஸ் பிரிவிலுள்ள பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நேற்று முந்தினம் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருமலை சாம்பல்தீவைச் சேர்ந்த நடராசா ஆதவன்(வயது19) என்பவரே உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.

இவர் நிலாவெளி கைலேஸ்வரன் மகா வித்தியிலயத்தில் கல்வி கற்று வந்ததுடன் ,குடும்ப கஸ்டத்தில் விடுமுறை நேரங்களில் தனது தேவைக்காக 3 பேருடன் காட்டுக்கு சென்றுள்ளார்.
இவர் உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியதில் கிளை தன் உடல் மீது விழுந்ததன் காரணமாக உயிழந்துள்ளாதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் அறிய முடிகின்றது.
மரணமடைந்ந இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.ரூமி விசாரித்ததுடன், பிரேத பரிசோதனைக்காக திருமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வைத்தியதிகாரி டாக்டர் ருக்கிர நதீர தலைமையில் நேற்று பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம் பெற்றது.அதன் பின் கடலம் உறவினர்களிடம் கையளிக்க்கப் பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -