முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டபோது சாதுர்யமாக செயற்பட்டவர் மர்ஹூம் சுக்ரி


ஐ. ஏ. காதிர் கான்-

லங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் ஒருவரான கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம். சுக்ரியின் மறைவு, இலங்கை வாழ் அறிவு சார்ந்த சமூகங்களுக்கு மாத்திரமல்ல, அவருடைய மாணாக்களுக்கும் பேரிழப்பாகும். இலங்கை ஒரு அறிவின் விடிவெள்ளியை இழந்துவிட்டது. புனித ரமழானின் இறுதிப்பத்தில் மறைந்த அன்னாரது மண்ணறையை அல்லாஹ் விசாலமாக்கி வைக்க வேண்டும் என்றும், மறுமையில் உயர் ஸ்தானத்தை அன்னாருக்கு வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இன்று (18) வபாத்தான கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி தொடர்பில் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஜாமிஆ நழீமிய்யாவின் பணிப்பாளரும், ஸ்தாபகத் தலைவருமான மர்ஹூம் நழீம் ஹாஜியாருடன் நழீமிய்யா உருவாக்கத்துக்கு இணைந்து பணியாற்றியவருமான கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம். சுக்ரியின் மறைவானது, என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அன்னாரது இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும் என்றும் அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மர்ஹூம் சுக்ரி தனது கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் , பேராதெனிய பல்கலைக்கழகத்திலும், இங்கிலாந்து எடின்பரோவிலும் கற்றுத் தேர்ந்தவர்.

கடந்த காலங்களின்போது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட வேளைகளில் மிகவும் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் செயற்பட்டு தனது பங்களிப்புக்களை வழங்கி வந்தவர்.

மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களின் ஆற்றொழுக்கான உரைகளும், ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும், பரந்தளவிலான சிந்தனைகளும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
1978 ஒக்டோபர் மாதம் முதல் வெளிவரும் "இஸ்லாமிய சிந்தனை" சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள் எனக்கூறலாம்.

கலாநிதி மர்ஹூம் சுக்ரி, நாடறிந்த முஸ்லிம் கல்விமானாகத் திகழ்ந்தவர். அவரது இழப்பு, நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அன்னார் இறக்கும் வரையிலும் அறிவுப்பணி, கல்விப் பணிகளுக்காக ஆற்றிய பங்களிப்புக்களை அல்லாஹ் இப்புனித ரமழானின் இறுதிப் பத்தில் பொருந்திக் கொள்வானாக. குறிப்பாக, ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவாகக் கருதப்படும் புனித "லைலத்துல் கத்ர்" இரவை எதிர்பார்க்கும் சிறப்புமிக்க நாளில் அவர் அல்லாஹ்வின் சன்னிதானத்திற்குச் சென்றுள்ளார்.

அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக...!
அன்னாருக்கு "ஜன்னத்துல் பிர்தெளஸ்" எனும் அதி உயர்ந்த சொர்க்கத்தையும் மறுமையில் அல்லாஹ் வழங்கி வைப்பானாக...!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -