சம்மாந்துறை பிரதேச பிடவைக் கடைகளில் அதிரடி பரிசோதனை, கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் விசேட ஆலோசனைகள்.


ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேச செயலக கொரோனோ பாதுகாப்பு செயலணியினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) அறிவிக்கப்பட்ட விஷேட அறிவித்தலின் கீழ் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட புடவைக் கடைகள் செயற்ப்படுகின்றனவா என கண்டறியும் நோக்குடன் இன்று (06) விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீ.பீ.எம். ஹனீபா, எம். இலங்கோவன், எம்.ஐ.எம். ஹனிபா, பீ. இலங்கோ உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன்போது சம்மாந்துறையில் அமைந்துள்ள அனைத்து புடவைக் கடைகளினதும் கோரோனா மற்றும் பொதுச் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் அறிவுறுத்தப்பட்டதோடு. முகக் கவசம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதவர்களை திருப்பதி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -