நிந்தவூர் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது


பாறுக் ஷிஹான்-
நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(29) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.எனினும் உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி பார்வையிட்டார்.அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மருமகன் இரவு அடையாளம் காட்டியிருந்தார்.
இதனடிப்படையில் நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -