குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் அவர்களின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவலக ஊழியர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்கிய குழுவினரால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் அதிகம் விரும்பும் கடற்கரையான புல்மோட்டை அரிசி மலை கடற்கரைப் பகுதியினை சிரமதான பணி மூலம் இன்று(29) துப்புரவு செய்தனர்.
இதன் போது அரிசி மலை விகாராதிபதி யின் விசேட அழைப்பையேற்று விகாரைக்கு சென்ற குச்சவெளி தவிசாளர் அங்கு இருந்த பௌத்த மதகுருமார்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது அரிசி மலைக்கு செல்லும் வீதியினை செப்பனிட்டு தருமாறு பௌத்த மதகுருமாறால் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகளை மிக அவசரமாக செய்வதாக தவிசாளர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சிரமதான வேலையை மேற்கொண்ட குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினருக்கு மதகுருமார்களால் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
