மூடப்பட்ட மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது


பாறுக் ஷிஹான்-
ம்பாரை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானசாலைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதியதை காண முடிந்தது.

இன்று(13) காலை குறித்த மதுபான சாலை திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன் மதுப்பிரியர்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டில் சம்மாந்துறை பொலிசார் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த மதுபானசாலையில் கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை என்பதுடன் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு சில நிமிடங்களில் அதிகளவான மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியதுடன் கொரோனா அச்சுறுத்தலையும் மறந்து சமூக இடைவெளியையும் பேணாது மிகவும் மோசமான நிலையில் நடந்து கொண்டனர்.

பின்னர் பொலிசாரின் கண்காணிப்புடன் விற்பனை இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.இது தவிர ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில் வரையறை அடிப்படையில் மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -