இம்முறை பொதுத்தேர்த‌லில் ம‌யிலுக்கு ஒரு ஆச‌ன‌ம் கிடைக்குமா?- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


ம‌யிலுக்கு 1 ஆச‌ன‌ம் கிடைத்தால் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் முத‌லில் அக்க‌ட்சியுட‌ன் இணைந்த‌வ‌ன் என்ற‌ வ‌கையில் ச‌ந்தோச‌ப்ப‌டுவேன். ஆனால் க‌ள‌ நில‌வ‌ர‌ம் கொஞ்ச‌ம் ச‌ந்தேக‌மாக‌ உள்ள‌து. இது ப‌ற்றி அர‌சிய‌ல் ஆய்வு ஒன்றை செய்வோம்.
க‌ட‌ந்த‌ 2 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 2018ம் ஆண்டு ACMC அமைச்ச‌ர‌வையில் இருந்த‌ நிலையில் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் போட்டியிட்ட‌ உள்ளூராட்சி தேர்த‌லின் முடிவுக‌ள்.
அட்டாளைச்சேனை: 4388
இற‌க்காம‌ம். 2313
பொத்துவில் 4288
நிந்த‌வூர் 7260
க‌ல்முனை 7573
ச‌ம்மாந்துறை 12920
அக்க‌ரைப்ப‌ற்று 659
ஏதோ ஒன்று விடுப‌ட்டுள்ள‌து.
மொத்த‌ம் 40765.


இதில் ச‌ம்மாந்துறையில் ம‌ட்டுமே அதிகூடிய‌ வாக்குக‌ள் விழுந்துள்ள‌ன‌. இத‌ற்கு கார‌ண‌ம் வி சி ம‌ற்றும் ந‌வ்சாத்.

த‌ற்போது வி சி அதாவுள்ளாவுட‌ன் இணைந்துள்ளார். ந‌வ்சாத் க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் ம‌றைமுக‌மாக‌ மொட்டுக்கு ஆத‌ர‌வ‌ளித்தார்.

இப்போது மு. காவில் இருந்த‌ மாஹிர் ம‌. காவில் இணைந்துள்ளார்.
2018 தேர்த‌லில் ச‌ம்மாந்துறையில் மாஹிர், ம‌ன்சூர் எம் பி, unp இணைந்தும் பெற்ற‌ வாக்குக‌ள் 13034. ஆக‌வே இதில் மாஹிருக்குரிய‌ வாக்குக‌ள் ஐயாயிர‌த்துக்கும் குறைவு என்றுதான் சொல்ல‌ வேண்டும்.
நிந்த‌வூரை பொறுத்த‌வ‌ரை ஹ‌ச‌ன‌லி, தாஹிர் இணைந்து ம‌. காவுக்கு 7260 பெற்றுக்கொடுத்த‌ன‌ர். இம்முறை ஹ‌ச‌ன‌லி ம‌. காவுட‌ன் இல்லை என்ப‌தால் அதிலும் கொஞ்ச‌ம் குறைவு ஏற்ப‌டும்.

க‌ல்முனைத்தொகுதியில் ஐயாயிர‌த்துக்கு மேல் கிடைப்ப‌து ச‌ந்தேக‌ம். கார‌ண‌ம் முன்னாள் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர் 2018ல் ம‌. கா பொறுப்பாள‌ராக‌ வேலை செய்தும் பெற்ற‌ வாக்குக‌ள் 7573.

2011 உள். தேர்த‌லில் ம‌. கா upfa யுட‌ன் இணைந்து க‌ல்முனையில் பெற்ற‌து 8524. இதில் வ‌ழ‌மையாக‌ ஆயிர‌ம் வாக்குக‌ள் சுத‌ந்திர‌ க‌ட்சிக்கான‌து. இத்தேர்த‌லில் க‌ல்முனையில் ம‌.கா சார்பாக‌ போட்டியிட்ட‌ முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் ந‌ற்பிட்டிமுனை முபீத், உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி. இவ‌ர்க‌ள் பெற்றுக்கொடுத்த‌ வாக்குக‌ள் சுமார் 7000. அதே வாக்குக‌ளையே 2018லும் அக்க‌ட்சி பெற்ற‌து.
2018 தேர்த‌லில் க‌ல்முனைக்குடிக்கு கிடைத்த‌ ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ர் எவ‌ருக்கும் பிரித்துக்கொடுக்காமை கார‌ண‌மாக‌ க‌டுமையான‌ அதிருப்தி க‌ட்சிக்குள் நில‌வுவ‌தால் ஐயாயிர‌த்துக்கு மேல் கிடைப்ப‌து க‌ஷ்ட‌ம். அட்டாளைச்சேனையிலும் க‌ட்சி உடைந்துள்ள‌து.
இற‌க்காம‌த்திலும் அதிருப்தி உள்ள‌து.
இவ்வாறு பார்க்கும் போது என‌து க‌ணிப்பின் ப‌டி இன்றிருக்கும் நிலையில் ACMC அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் சுமார் 30, 000 வாக்குக‌ளையே பெறும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -