நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தேர்தலை நடாத்துவதே அரசின் நோக்கம்-தயாகமகே

எம்.எம்.அஸ்ஹர் இப்றாஹிம்- 

நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை மிக விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களை கொவிட் 19 எனப்படும் கொரணா வைரசு தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினால் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளவர்களை மீட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பச் செய்தில் ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்பிலும் எதிர்வரும் பொதுத்தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல் தன்மையையும் அம்பாறை மாவட்ட தமிழ் , முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடொன்று இன்று ( சனிக்கிழமை) அம்பாறை தயா ஆடைத்தொழிற்சாலை கேட்போர் கூடத்தில் முன்னாள் பிரதியமைச்சர் அனோமா கமகே தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்“ந்து கருத்து தெரிவிக்கையில் ,
இலங்கை நாலா புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த நாட்டுக்குள் விமான நிலையத்தினூடாகவும் , துறைமுகத்தினூடாகவுமே உள் நுழைய முடியும்.அரசாங்கம் ஆரம்பத்தில் விட்ட தவறினால் முழு நாடுமே இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இந்த நாட்டில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

 இவர்களில் 42,067 குடும்பங்களே கொரணா வைரசு தொற்று தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பங்கள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ரணில் விகரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியானது அரசாங்கத்திற்கு கொரலணா வைரசு தொற்றை குறைப்பது தொடர்பில் வழங்கும் எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லாமல் பொதுத் தேர்தலை எப்படியாவது நடத்தி முடிப்பதில் குறியாக இருக்கின்றது.ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களும் இன மத பிரதேச வேறுபாடின்றி அபிவிருத்தி கண்டது.இன வெறி உணர்வை சிங்கள் மக்கள் மத்தியில் விதைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டனர். 

அதே பாணியில் பொதுத் தேர்தலிலும் நடந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியில் இன மத பிரதேச வேறுபாடுகள் கிடையாது .எல்லோரும் இந்நாட்டு மக்களே ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதால் நாளாந்தம் உழைத்து உண்ணும் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகி வருவதுடன் பெண்கள் , சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வீட்டில் அடங்கி கிடப்பதால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

.முப்படை வீரர்கள் , பொலிஸார் , சுகாதார திணைக்கள அதிகாரிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள் , அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் , கிராம சேவை உத்தியோஸ்தர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களை இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்காக இரவு பகல் பாராது தியாக மனப்பாங்கோடு சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நாட்டிலுள்ள 61 இலட்சம் குடும்பங்களில் அரச உத்தியோஸ்தர்கள் 16 இலட்சம் குடும்பங்கள் நீங்க 45 இலட்சம் குடும்பங்கள் அரசினால் வழங்கப்படும் உதவி தொகையினை பெற தகுதி பெற்றுள்ளனர்.. ஆனால் இதுவரை 70 இலட்சம் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தும் அதிகளவிலான மக்கள் இந்த உதவித் தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர். இந்த உதவித் தொகை யாரை சென்றடைந்தது. உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றை நியமித்து இந்த ஊழல் பேர் வழிகளை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டும்.இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றது என்று அரசாங்கள் தெரிவித்தாலும் அது கப்பலில் இதுவரை வந்து சேரவில்லை போல் தெரிகின்றது.என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -