வெளிநாடுகளிலிருந்து வந்த 987பேரில் 984பேர் விடுதலை! கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சுகுணன்.


காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்தியத்தில் சமகாலத்தில் கொரோனா நிலைவரம் தொடர்பாக இற்றைப்படுத்தப்பட்ட இறுதிக்கட்டத் தகவல்களை துல்லியமான தரவுகளுடன் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி ஆரம்பித்தநாளிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப்பிராந்தியத்திற்குள் வந்த 987பேரில் தனிமைப்படுத்தலின்பின்னர் 984பேர் விடுதலையாகியுள்ளனர். மேலும் மூவரே தனிமைப்படுத்தலிலுள்ளனர்.

இவ்வாறு சமகாலத்தில் கல்முனைப்பிராந்திய கொரோனா நிலைவரம் தொடர்பாகக்கூறிய கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் ; மேலும் தெரிவிக்கையில்;.
கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை ஆக இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இரண்டாந்தரதொற்றுக்கு ஆளாகியிருந்தார்.
இதேவேளை ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 81பேரில் 13பேருக்கு தொற்றுஇருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுபபிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 39பேர் தற்சமயம் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப்பிராந்தியத்திற்குள் வந்த 1846பேரில் சுயதனிமைப்படுத்தலின்பின்னர்1579பேர் விடுதலையாகியுள்ளனர். 267பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க 210பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள செய்யப்பட்டுள்ளன. ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 203பேருக்கும் சமுகத்தில் 3பேருக்குமாக இப்பரிசோதனை நடாத்தப்பட்டது.
இதேவேளை எமது பணிமனைக்கு இன்வ்றாறெட் டிஜிட்டல் உடல்வெப்பமானிகள் 15 லண்டன் அகிலன் அமையத்தினால் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்று அவை 13சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளுக்கும் பொலிஸ்நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன எனறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -