6 பொலிஸ் நிலையங்களுக்கு கொரோனா கிருமி அழிப்புக் கருவிகள் கையளிக்கப்பட்டன

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பில் உள்ள 6 பொலிஸ் நிலையங்களுக்கு கொரோனா கிருமி அழிப்புக் கருவிகளை இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கக் கிளையினால் கைளயிக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் பரவும் இத்தருணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கொரோனா ஒழிப்புக்காக பல உதவிகளை இச்சங்கம் தொடராக மேற்கொண்டு வருகின்றது.

இன்று சங்கத்தினால் மாளிகாவத்தைஇ மருதானைஇ கிரேண்ட்பாஸ்இ கெசல்வத்தஇ வெல்லம்பிட்டிஇ கொட்டகேன ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு கிருமிதொற்று மருந்து விசிறும் கருவிஇ உடல் வெப்பநிலையை அளிவிடும் தேமா மீற்றர் என்பன இப்பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சுங்கத்தில் தலைவர் றுஸானுடீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.இக்பால் மற்றும் சங்கத்தின் அங்கத்தவர்கள் எம்.எஸ்.எம்.மப்ராஸ்இ எம்.ரமீஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார். மாளிகாவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம்.ஏ.உதயகுமாரஇ மருதானை பொலிஸ் பொறுப்பதிகாரி நளின் ஜெயசுந்தர உள்ளிட்ட ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இப்பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -