கிண்ணியா ,கொழும்பு வரையான 49 ம் இலக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நாளை (29)முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக கிண்ணியா சாலையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பஸ் வண்டியானது நாளை (29)காலை 06.00 மணிக்கு கிண்ணியாவில் இருந்து நிட்டம்புவ வரை சேவையில் தொடர்ந்தும் பொது மக்களின் தேவை கருதி ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் இச் சேவை இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்19 ஒழிப்பு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறவும் குறித்த பஸ் சேவை உரிய சமூக இடைவெளி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
