நளிர் பவுண்டேசன் நிறுவனத்தினால் அன்றாட வருமானத்தை இழந்த 1000 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கு நிவாரண உதவி !!


நூருல் ஹுதா உமர்-
கொரோனா கோவிட் -19 வைரஸ் தொற்றின் காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மத்தியமுகாம் நளீர் பவுண்டேசன் நிறுவனத்தினால் நான்காம் கட்டமாக இன்று மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.வீரசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

நளிர் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ. ரஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச் செயத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலும், உஹண பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விஜயபுரம் கிராம சேவகர் பிரிவுக்கும் நான்காம் கட்டமாக 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் அன்றாட வருமானத்தை இழந்த தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்கள் 100க்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதுவரை மத்தியமுகாம் நளீர் பவுண்டேசன் நிறுவனத்தினால் கொரோனா கோவிட் -19 வைரஸ் தொற்றின் காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் 900 க்கும் அதிகமான தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பட்டுள்ளதுடன் ஐந்தாம் கட்ட நிவாரண நடவடிக்கைகளை இவ்வாரத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக நளிர் பவுண்டேசன் நிறுவனத்தலைவர் எம்.ஏ. ரஹீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -