கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஆயுர்வேத மருந்தகங்களில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு மூலிகைப் பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் திங்கட்கிழமை (6) சிகிச்சைக்காக வருகை தந்த மக்களுக்கு குறித்த மூலிகைப் பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆயுர்வேத சுதேச மருத்துவ திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட மூலிகைப் பானத்தை நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.றிகாஸ் அவர்களின் தலைமையில் வருகை தந்த நோயாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

