மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று (16) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், முகக் கவசம் அணியாமல் பொருட் கொள்வனவுக்காக வந்தவர்களை பாதுகாப்புப் படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், பொருள் கொள்வனவுக்காக வீதிக்கு வரும் அனைவரும், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று வாழைச்சேனை பொலிஸார் அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் பொருட் கொள்வனவுக்காக முகக் கவசம் அணியாமல் வருகை தந்த பொதுமக்களை, இராணுவத்தினர், பொலிஸார் தடுத்து நிறுத்தி அறிவுரைகள் வழங்கியதோடு, முகக் கவசங்களை அணிந்து வருமாறு வீடுகளுக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.