நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைவரையும் முகக் கவசம் அணியுமாறு கோரியுள்ளதுடன் அதனைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க எமது கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் கோரிக்கைக்கு அமைவாக எமது பிரதேசத்தின் பிரபல சட்டத்தரணி ஹபீப் ரிபான் அவர்களால் இரண்டாயிரம் (2,000) முகக் கவசங்கள் கொள்வனவு செய்து ஷூரா சபைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
அவற்றை கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபை இன்று 16-4-2020 தியாவட்டவான், மீராவோடை, மாவடிச்சேனை, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் வீதியில் முகக் கவசம் இன்றிச் சென்றவர்களுக்கு வழங்கி வைத்தது.
பொதுநலன் சார்ந்த இச்செயற்பாட்டிற்கு எம்முடன் கோறளைப்பற்று மத்தி ஆட்டோ சாரதிகள் சங்கம், அகில இலங்கை YMMA கல்குடா கிளை, தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜூம்ஆ மஸ்ஜித், மீராவோடை சலேஞ்சஸ் விளையாட்டுக் கழகம், போன்ற பொது நிறுவனங்கள் உட்பட இளைஞர்கள் பலரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.
அத்துடன் ஷூரா சபையின் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
