ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொழும்பு ,கம்பகஹ,புததளம்,கண்டி மற்றும் யாழ்பாணம்,கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று (06) திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்தப்பட்டன.
இதனை தொடர்ந்து மலையக நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூடியிருந்தன.மலையக நகரங்களில் காணப்படும் சத்தோச நிலையங்களில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர்.
இதனால் சில்லறை கடைகளிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர்.;,மருந்தகங்கள்,மரக்கறி கடைகள்,எண்ணெய் நிரப்பு நிலையங்கள் ஆகியவற்றி பெரும் எண்ணிக்கையிலானோர் கூடி இருந்ததுடன் நீண்ட வரிசையும் காணப்பட்டன.
சுகாதார அறிவுறுத்தல்களை பேணுமாறு பொது மக்களிடம் சுகாதர தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் அதனை பின்பற்றுவதனை அவதானிக்க முடியவில்லை. பெரும் பாலான மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதிலும் வங்கிகளில் பணம் மீளப் பெறுவதிலுமே அக்கறை செலுத்தியிருந்தனர்.
மக்களின் பாதுகாப்பு கருதி ஓலி பெருக்கிகள் மூலமும் கொவிட் 19 என்ற வைரஸ் தொடர்பாக அறிவுறத்தல்களை வழங்கப்பட்டன.
அரசாங்கம் பொருட்களின் விலைகள் குறைக்கபபட்டிருந்த போதிலுமு; எனினும் மலையக நகரங்ளில் சத்தோச தவிர்ந்த பெரும்பாலான கடைகளில் அப்பொருட்கள் குறைத்து கொடுக்கவில்லை. முட்டை ,பருப்பு தேங்காய்,வெங்காயம் போன்றன அதிக விலைகளுக்கே விற்பதனை காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் மலையக நகரங்களுக்கு வரும் பெரும் பாலானோர் முகக்கவசம் அணிந்து இருந்ததுடன் ஒரு சிலர் ஒரு மீற்றர் இடைவெளியினை பேணியிருந்தனர்.
இதே வேளை ஒரு அடகு பிடிக்கும் கடைகள் மூடப்பட்டிருந்தமையினால் பெரும் எண்ணிக்கையானோர் தமது தங்க நகைகளை அடகு வைத்து அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்த போதிலும் அந்த நிலையங்கள் மூடியிருந்தமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
வங்கிகளில் இன்றை தினம் தன்னியக்க இயந்திரங்களின் முன் தமது பணத்தினை மீளப்பெறுவதற்கு நீண்ட வரிசை காணப்பட்டன.இந்த வரிசைகளில் மக்கள் சுகாதார இடைவெளி அதாவது சமூக இடைவெளி பேணுவதனை காணக்கூடியதாக இருக்கவில்லை.
மலையக பகுதிகளில் பஸ் சேவைகள் இடம்பெற்ற போதிலும் குறிப்பிட்ட அளவு பஸ் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றன.