எம்.என்.எம்.அப்ராஸ்-
வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திர படகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கல்முனை மீனவர் சங்க கிளையின் ஏற்பாட்டில் நிலவும் அசாதரண சூழ் நிலை காரணமாக வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை இன்று (03) பிற்பகல் நடைபெற்றது.
இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,
வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திர படகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ. ஹமீட் ,கல்முனை பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் மீனவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மேற்படி நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதில் சுமார் 450
குடும்பங்களுகான உலர் உணர்வு பொருட்கள்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் இவ் மீனவ கிளை அமைப்பினரால் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நிவாரண பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.