வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியில் அமைந்துள்ளது வர்த்தக நிலையங்கள் நான்கு இன்று (7) அதிகாலை 3.30 மணிக்கு இடைப்பட்ட நேரங்களில் திருடர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.
இருவர் முகங்களை மறைத்துக் கொண்டு வர்த்தக நிலையங்களை உடைக்கும் காட்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வீ. கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த வர்த்த நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையங்களை வாழைச்சேனை பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
