காரைதீவு சகா-
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான நாவிதன்வெளிப்பிரிவிலுள்ள வீரச்சோலைக்கிராம மக்களுக்கு நேற்று-10-வெள்ளிக்கிழமை ஒருதொகுதி உலருணவு 100 நிவாரணப்பொதிகள் நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
பிரித்தானியா 'அன்னை சிவகாமி அறக்கட்டளை' அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் நான்காம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் வீரச்சோலையில் வழங்கிவைக்கப்பட்டது.
அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
தனது அன்னையின் பேரால் கடந்த 10வருடங்களாக சமுகசேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின்நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி இம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
வீரச்சோலை சித்திவிநாயகர் நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் என்.ரங்கநாதன் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அமைப்பின்ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா கோரக்கர் ஆலயத்தலைவர் எஸ்.மோகன் மற்றும் கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ. தினேஸ்குமார் கிராமசேவையாளர் கே.உதயகுமார் திட்டஉத்தியோகத்தர் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
மாவட்டத்தில் பின்தங்கிய வீரச்சோலைக்கிராமத்தில் 183 குடும்பங்கள் பல வசதியீனங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுள் இதுவரை நிவாரணம் கிடைக்கப்பெறாத 100குடும்பங்களுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
