வரலாற்றில்முதற்றடவையாக கல்விப்பணிப்பாளர்கள் வீடியோ மாநாடு.



வி.ரி.சகாதேவராஜா-

ன்றைய கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் நவீன தொழினுட்பத்தின் துணைகொண்டு கல்வி அபிவிருத்தி கூட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது.

கொரோனா சட்டதிட்ட நடைமுறைகளின்படி மாவட்டம் விட்டுமறுமாவட்டம் செல்லமுடியாது கூட்டம் கூடுதல் தடை போன்ற பல்வேறு விதிகளுக்கு மத்தியில் தற்காலிக சமயோசித உத்தியாக புதியதொழினுட்பம்பய்னபட்டிருக்கிறது.

இத்தகையமுன்னோடி செயற்றிட்டம் கிழக்குமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.கிழக்கிலுள்ள திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை கல்முனைஆகிய கல்விமாவட்டங்களில் 17 கல்வி வலயங்கள் உள்ளன. அந்த கல்விவலயங்களின்கல்விப்பணிப்பாளர்களை வழமையாகச்சந்திக்கும் திருகோணமலையில் சந்திப்பதென்பது சமகாலத்தில் கஸ்டமானகாரியமாகும்.

அதற்காக இந்தச்சாட்டுக்களைவைத்து வாளாவிருக்காமல் தமது மாணவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில்இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோறற்விருக்கின்ற சுமார் 20ஆயிரம்மாணவர்களுக்கு உரியகற்றல் வசதியை செய்துகொடுக்கவேண்டும் என்ற உன்னதநோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் ஏற்பாட்டில் வரலாற்றில் முதற்றடவையாக மாகாணத்திலுள்ள 17வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டம் ஓரிடத்தில்கூடாமல் வீடியோ ZOOM என்ற நவீனதொழினுட்பமுறையின்கீழ் (VIDEO CONFERENCE) நடைபெற்றுள்ளது.

17வலயக்கல்விப்பணிப்பாளர்களும் வழமையாக திருகோணமலையில் மாகாணக்கல்வித்திணைக்களத்தில்கூடி இவ்வாறான கூட்டங்களை நடாத்துவது வழமையாகும்.
ஆனால் தற்போதைய கொரோனா நெருக்கடி நிலைமையில் திருமலைக்கு அனைத்து 17வலயக்கல்விப்பணிப்பாளர்களையும் அழைத்து கூட்டம்நடாத்துவதிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்த மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் சூம் ZOOM என்ற நவீன தொழினுட்பமுறைமையின்கீழ் இக்கூட்டத்தைக்கூட்டியுள்ளார்.
வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அவரவர் இடங்களில் இருந்தவாறு ஒரு திரையில்தோன்றி கருத்துக்களைப்பரிமாறி இம்முறை க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றமாணவர்களுக்கான வினாவிடைத்தாள்களை விநியோகித்தல் தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்தினர்.

அதன்படி மாகாணத்திலுள்ள சுமார் 20ஆயிரம் உயர்தரமாணவர்களுக்கு இவ்வினாவிடைத்தாள்கள் வட்ஸ்அப் மூலமும் அந்தவசதியில்லாத மாணவர்களுக்கு பத்திரங்களை நேரடியாக கிராமசேவைஉத்தியோகத்தர்கள் பொலிஸ்உத்தியோகத்தர்களின் உதவியுடன் விநியோகிக்கவும் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் கிழக்கிலுள்ள 17கல்விவலயங்களின் மாணவர்களின் வாட்ஸ்அப் வசதி பற்றிக்கலந்துரையாடியபோது ஓர் ஆச்சரியமான தகவலும் பதியப்பட்டிருக்கிறது. பொதுவாக கிராமப்புற மாணவர்களே இவ் வாட்ஸ்அப் வசதிஅற்றவர்களாக அல்லது குறைந்தவர்களாக இருப்பர் என நம்பப்பட்டது.
ஆனால் சமகாலத்தில் 17வலயங்களின் தரவுகளை பணிப்பாளர்கள் கூறியபோது இச்செய்தி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

பொதுவாக வசதி குறைந்தமட்டக்களப்பு மேற்கு அல்லுத கல்குடா வலயங்களே இவ்வசதி குறைந்த வலயங்களாகலாம் என்றுநம்பப்பட்டது. ஆனால் பணிப்பாளர்களது தரவுகளின்படி மிகவும் வசதிகூடிய மட்டக்களப்பு வலயமே வாட்ஸ்அப் வசதி குறைந்த மாணவர்களுள்ள வலயமாக இனங்காணப்பட்டது வியப்புக்குரியதாகஇருந்தது.

எதுஎப்படியிருந்தபோதிலும் வாட்ஸ்அப்வசதியில்லாத அனைத்துமாணவர்களுக்கும் குறித்த வினாவிடை பத்திரங்களை நேரடியாக வழங்க மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் இச்சந்திப்பு ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவர்கைக்கு அவைகிடைத்துள்ளதா என்பது பற்றியும் தனக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இக்காலகட்டத்தில் இத்தகைய முன்னோடித்திட்டத்தை கையாண்டுள்ள மாகாணக்கல்விப்பணிப்பாளர் உண்மையிலே பாராட்டுக்குரியவராகிறார். அதனோடிணைந்து செயற்படுகின்ற வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அவர்களது குழாத்தினரும் பாராட்டுக்குரியவர்களே.

இன்றையகாலகட்டத்தில் இத்தகைய வீடீயோ தொடர்பு மாநாடு இலங்கையில்கல்விப்புலத்தில் நடாத்தப்பட்டுள்ளமை இதுவே முதற்றடவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -