இருமிக்கொண்டிருந்த நண்பனை கொரோனா அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரம்.

கைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவேளை இடைவிடாது நண்பன் இருமிக்கொண்டிருந்த நிலையில் அவனை மற்றொரு நண்பன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தயாநகர் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

24 வயது ப்ரவீஷ் என்பவர் தனது நண்பர்கள் உடன் நேற்றிரவு கைபேசியில் கேம் விளையாடியுள்ளார்.

அப்போது, அவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருக்க சக நண்பரான ஜெய்வீர் என்பவர் கோபம் அடைந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடிக்க, திடீரென ஜெய்வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு ப்ரவீஷை நோக்கி சுட்டுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு பிரவீஷின் காலில் துளைக்க, அவர் வலியால் அலறியுள்ளார், துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு கூட, ஜெய்வீர் தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக பிரவீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்வீர் உள்பட சம்பவ இடத்தில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -