எனினும் சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே பட்டினியால் உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியும் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
66 வயது மதிக்கத்தக்க வெள்ளை முடிகொண்ட முதியவரே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்படவில்லை.
அதனால் உறவினர்கள் யாராவது இருப்பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
முதியவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை என்று பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், இன்று மாலை இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
வயோதிபர் கடந்த சில நாள்களாக எங்கும் செல்லாது இங்கேயே இருந்தார். சில நாள்கள் நான் அவருக்கு கஞ்சி வழங்கியுள்ளேன். அதனைவிட அவருக்கு உணவு கிடைப்பதாக நான் அறியவில்லை. யாருமே அவருக்குக் கொண்டு வந்து உணவு வழங்குவதையும் நான் கண்டதில்லை என்று அந்தப் பகுதியில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இறப்பு விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை குறிப்பிட்ட நாள்களுக்குள் எவரும் உரிமை கோராதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஐபிசி