கசிப்பு மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நோர்வூட் பொலிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு பேர் இன்று (07) திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட நடவடிக்கை எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்று (06) திகதி நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் இன்ஜஸ்ரி தோட்டத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன.
போலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இன்ஜஸ்ரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
இதே வேளை நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அயரபி பகுதியில் மோட்டர் சைக்கில் ஒன்றினை சோதனை செய்த போது கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் நோர்ட்டன் விதுலிபுர பகுதியை சேர்;ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.