திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு சுமார் 100 மீற்றர் தொலைவில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் வைத்தியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த வைத்தியர் கடமைநிறைவு பெற்று கொட்டகலை பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் கார் பலத்;த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் வைத்தியர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
குறித்த காரினை வைத்தியரே செலுத்தியதாகவும் மழை காரணமாக வீதி வழுக்கியதில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.