76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு காலவரையறையின்றி மதுவரி திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
ட்டன் மதுவரி திணைக்கள அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சுமார் 76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.
ஹட்டன் பொகவந்தலாவை மஸ்கெலியா, கொட்டகலை ,தலவாக்கலை ,பத்தனை ,டயகம , அக்கரபத்தனை உள்ளிட்ட ஹட்டன் பிரதேசத்தை உள்ளடக்கிய நகரங்களில் உள்ள மதுபானசாலைகளுக்கு இவ்வாறு காலவரையரையின்றி சீல் வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவியதனை தொடர்ந்து கடந்த 20ம் திகதி முதல் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் புதுவருடம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலினை கருத்தில் கொண்டு நிலைமை சீரடையும் வரை மதுபானங்களை மக்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்;வதற்காக குறித்த மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி முதல் குறித்த சீல் வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் 18 மதுபான விற்பனை நிலையங்கள் சீல் வைக்கப்பட்டதனை தொடர்ந்து மொத்தம் 76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -