சமூக வலைத்தளங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பற்றி பரப்படும் போலியான விமர்சனங்களுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம்; ஏற்பட்ட காலம் முதல் மலையக பகுதிகளில் கொரோனா தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதிலும் இ.தொ.காவின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு தலா 3000 ரூபாய் என்ற அடிப்படையில் மானிய விலையில் பொருட்கள் தோட்டங்கள் தோறும் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தோடு இணைந்து சவக்கார கட்டிகள், கைக்கழுவும் திரவியம்,கிருமிநாசினிகள், மருந்துகள், மருந்து கொள்கலன்கள் என்பன பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொரோனா (கொவிட் 19) பிரச்சனை ஆரம்பித்தவுடனே சமூர்த்தி பயனாளிகள் மற்றும் தொழிலற்றவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிலற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் மாவட்ட செயலகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களினூடாக ரூபா 5000 வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் சமுர்த்தி பயனாளிகளுக்கு நாடளாவிய ரீதியில் நிவாரணங்களை வழங்கப்பட்டன. அதேபோல அரசு உதவி தொகைகளை பெற்றுக் கொள்கின்ற அங்கவீனர்கள் முதியவர்கள் போன்ற தரப்பினருக்கும் நாடளாவிய ரீதியிலான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களத்திலிறங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்யும் அனைத்து வேலைகளையும் படம் பிடித்து காட்டிக்கொண்டிருக்க இயலாது. பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களத்தில் நின்று செய்துக்கொண்டிருக்கின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் பல்வேறு வகையிலான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எங்களை விமர்சித்து அரசியல் இலாபம் தேட முற்பட வேண்டாம். கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுபடுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் பாரிய வாழ்வாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதோடு அன்றாட வாழ்வை கொண்டு செல்ல பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மக்களும் பல்வேறு உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு உதவ வேண்டிய கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.
உதவிகள் அனைத்துமே விளம்பரத்திற்கு அப்பால் அரசியலுக்கு அப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே முன்னெடுக்கபடுகின்றன. ஆனால் இவற்றை விமர்சிக்கும் வகையில் சிலர் பலவிதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களிள் மிகவும் மட்டமாக செயற்படுகின்றனர். பொறுத்தமற்ற வகையில் அரசியல் வக்குரோத்து காரணமாக பல கற்பனைகளையும் பொறுத்தமற்ற படங்களையும் பொறுத்தமற்ற விதத்தில் எடிட்டிங் செய்து பதிவிடுகின்றனர்.
இதனையும் சில ஊடகங்கள் பதிவேற்றுகின்றன. இவ்வாறான இழிவான செயல்கள் சமூகத்தின் பின்னடைவையே எடுத்துக்காட்டுகின்றன. அநாவசியமான விளம்பர அரசியல் செய்ய வேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இல்லை.ஆகவே சில அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் போலி பிரச்சாரங்களையும் போலி விமர்சனங்களையும் பதிவிடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறான பொய் பதிவேற்றங்களினால் எனது பெயருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்ச்சிப்பது நாகரீகமாக இல்லை. என்னை பொறுத்தவரையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளராக போட்டியிட உள்ளேன்.
எனக்கென்று ஒரு கொள்கை இருக்கின்றது. எனது பள்ளி பருவத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளராக இருந்து வருகின்றேன். இன்று 30 வருடங்களுக்கு மேலாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து கட்சி மாராமல் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வருகின்றேன். அதுமட்டுமல்லாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் விசுவாசியாகவும் காணப்படுகின்றேன். எனது இளமைப் பருவம் முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மட்டுமே அங்கம் வகித்து வரும் நான் ஒரே கட்சி,ஒரே கொடி, ஒரே தலைமைத்துவம் என்பதே எனது கொள்கையாக வாழந்து வருகின்றேன் என்றார்.