எதிர்வரும் June மாதம் 2ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்பதால், ஜனாதிபதி பாரளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளமொன்றில் சுமந்திரன் கூறியதாக தெரிவிக்கப்படும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும்.
எனினும் June மாதம் 2ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்பதால், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் இரத்தாகி விடும்.
இதனடிப்படையில், ஜனாதிபதி பாரளுமன்றத்தை மீண்டும் கூட்டினாலும், கூட்டாவிட்டாலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கமைய பழைய நாடாளுமன்றம் செயற்பட முடியும் என்பதுடன், கூடவும் முடியும்.
தற்போது நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மின்னஞ்சல் மூலம் வழக்கை தாக்கல் செய்ய முடியும் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
