கடையோரங்களில் தங்குபவர்கள், அநாதரவானவர்களுக்கும் கொரோனா தனிமைப்படுத்தலில்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

நாட்டில் தற்போது அச்சுறுத்தலாக காணப்படும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின் பெயரில் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

குறிப்பாக இந்த நோய் மக்கள் ஒன்று கூடுவதால் அதிகம் பரவுகின்றது என்ற அடிப்படையில் மக்கள் ஒன்று கூடாத வகையில் ஏனைய நாடுகளைப்போல் அரசாங்கம் இலங்கையிலும் ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் வெளியில் வராதவாறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் எந்தவித அடிப்படைப் பாதுகாப்பும் இன்றி வீதியோரங்களிலும், பொது இடங்களிலும் தங்கும் யாசகர்கள், வீடின்றி நாளாந்தம் கூலித் தொழில் செய்து விட்டு கடையோரங்களில் தங்குபவர்கள், அநாதரவானவர்கள் போன்றவர்களாலும் இந்த நோய் பரவுவதாக கண்டறிந்து உறுதிப்படுத்தப்பட்டதால் இது விடயத்தில் சுகாதாரத் துறையினரும், பொலிஸாரும் அதீத கவனம் செலுத்தி தலைநகரில் இவ்வாறு சுற்றித் திரிபவர்களை ஒன்று சேர்த்து தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வகையில் பெற்றா பொலிஸ், குணசிங்கபுர பொலிஸ் மற்றும் அதனை அண்டிய பகுதி பொலிஸ் நிலையங்கள் ஒன்றினைந்து கடந்த இரண்டு நாட்களாக குறித்த நபர்களை குணசிங்கபுர தனியார் பேரூந்து நிலையத்திற்குள் ஒன்று கூட்டி அவர்களை தனிமைப்படுத்தி சுகாதார மயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று பொலிஸார், சுகாதாரத்துறை அதிகாரிகள், கொழும்பு மாகர சபை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இவர்களை முதலில் நீராட வைத்து புதிய ஆடைகள் அணிய வைத்தனர். இதற்காக பாரிய பவுசர்களில் நீர் கொண்டு வந்து அவர்களை நீராட வைத்துள்ளதுடன் அவர்களுக்கு புதிய ஆடைகள், பாய்கள், முகக் கவசங்கள், டவல் என்பன வழங்கப்பட்டதுடன் அவர்களை நான்கு பேரூந்துகளில் ஏற்றி தனிமைப்படுத்தும் நிலையங்களுக்க அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கான ஆடைவகைகளின் ஒரு தொகுதியை இலங்கை ரெட்குரோஸ் அமைப்பு வழங்கியுள்ளதுடன் பொலிஸாரும் தேவையான ஏனைய பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

குறித்த வீதியோரங்களில் எந்தவித சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் யாசகம் எடுப்பவர்கள், அவர்களுடன் சேர்ந்து வீதியோரங்கள், பொது இடங்களில் தங்குபவர்களால் இவ்வாறான நோய்கள் பரவும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் இதனால் பொதுமக்களுக்கு அபாயம் இருப்பது தொடர்பாக எமது செய்தியில் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குரல்பதிவுகள்.

கொழும்பு மத்தியபகுதி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஸாந்த சொய்ஸா மற்றும் கொழும்பு மாநகர சபையின் பொது சகாதார அதிகாரி ஆகியோர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -