வைரஸ் பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் நேற்று தான் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக சீனாவில் பிப்ரவரி 23-ம் தேதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் நேற்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.
