நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்டம் அமைத்தலும், விதைகள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது தோட்டம் செய்யும் நபர்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், வெண்டி, போஞ்சி, பாகல் போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டது.
