கொரோனா வைரசின் பாதிப்புக்கள் தொடர்பாக தொடர்ச்சியான கண்காணிப்பு பணியில் பொதுசுகாதார உத்தியோகத்தர்களால் மேற்பார்வை செய்ய வேண்டிய நிலையில் புல்மோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களுக்கு சுமார் 04 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று(10) குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ முபாரக் அவர்களினால் உத்தியோகபூர்வமாகவழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது சுகாதார உத்தியோகத்தர்,குச்சவெளி பிரதேச விசேட அதிரடி படையின் பதில் பொறுப்பதிகரி, இராணுவ அதிகாரி மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்..
