கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பு தேடி துஆ பிரார்த்தனை


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
லகை ஆக்கிரமித்துள்ள கொரோனா நோயிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்க வேண்டி விஷேட துஆ பிராத்தனை நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாயல்களில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயலில் விஷேட துஆ பிராத்தனை பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் மௌலவி ஏ.எம்.அப்துல்லாஹ் விசேட பேருரையும், விஷேட துஆ பிரார்த்தனையையும் நடாத்தி வைத்தார்.

இங்கு கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும், இந்த நாட்டில் கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டு வரும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர், சுகாதார துறையினர் ஆகியோருக்கு தேகாரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், கொரோணா நோய் ஒட்டுமொத்தமாக உலகில் இருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -