கே.சுந்தரலிங்கம் -
திகா-உதயா நிவாரண திட்டத்தின் கீழ் டிக்கோயா தரவளை கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு இன்று (10) திகதி வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரண பொதிகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வழங்கினார்.
டிக்கோயா தரவளை கிராம மக்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோருடன் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரனுடன் , உதயகுமாரின் செயலாளர் ஸ்ரீPதரன், மகளிர் பிரிவு இணைப்பாளர் திருமதி உஷா, மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
