4348 பேர் தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர்


ராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதுவரை 4348 பேர் தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் 1582 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினமும் இன்றைய தினமும் கொவிட் தொற்றுக்குள்ளானவர் அதிகரித்துள்ள கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலிருந்துஇ 242 பேர் நேற்றைய தினமும் 1010 பேர் இன்றைய தினமும் இராணுவத்தினரால் தன்மைப்படுத்திக் கண்காணிக்கும் 03 முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் நேற்றைய தினம் பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பகுதிகளில் இருவர் கொவிட் தொற்று அடையாளங் காணப்பட்டனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு பொரலஸ்கமுவ பகுதியில் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்இ குறித்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் பிலியந்தலையில் அடையாளங் காணப்பட்ட தொற்றுக்குள்ளானவர் தொடர்பு கொண்டிருந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்களை இன்றைய தினம் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கையெடுத்துள்ளோம்.
மேலும்இ பாகிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த மாணவர்களும்இ இலங்கை இராணுவம்இ விமானப்படைஇ கடற்படை உத்தியோகத்தர்கள் பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக சென்றவர்கள் பயிற்சி நிறைவடைந்து ஒருமாத காலமாக தங்கியிருந்தவர்களை இன்று மாலை ருடு 1206 விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் தனிமைப்படுத்தல் செயன்முறைக்காக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -