மதுபானசாலையை உடைத்தவரை தேடிச்சென்ற மோப்பநாய் 200 போத்தல்களுடன் நால்வரைக் காட்டிக் கொடுத்தது.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் காசல்ரீ பகுதியில் பார் ஒன்றினை மதுபானசாலையை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவரைத் தேடிச்சென்ற பொலிஸ் மோப்பநாய் சட்டவிரோத 200 மதுபான போத்தல்களுடன் நால்வரைக் காட்டிக்கொடுத்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் காசல்ரீ பிரதான வீதியில் காசல்ரீ பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையொன்றினை இன்று (25.04.2020) அதிகாலை 1.00 மணியளவில் இனந்தெரியாதோரால் உடைத்து மதுபானசாலையில் இருந்த 50,000 ரூபா பணம் , பியர் போத்தல் , மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து இன்று (25) காலை முதல் ஹட்டன் பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், கைரேகை அடையாளப்பிரிவினர் மற்றும் மோப்பநாய் பிரிவினர் மற்றும் இரானுவம் ஆகியோர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் ஹட்டன் மோப்பநாய்ப் பிரிவைச்சேர்ந்த பிளடிமா என்ற மோப்பநாயினை பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டனர்.இதன் போது மதுபானசாலை உடைக்கபட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் வரை சென்று லெதண்டி தோட்ட குடியிருப்பு ஒன்றில் சென்ற நாய் குறித்த சட்டவிரோத சாராயம் 200 போத்தல்களுடன் ஒருவரைக் காட்டிக்கொடுத்தது.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 200 கால்போத்தல் சாரயங்கள் மீட்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து இன்னும் குறித்த வீடுகளுக்கு சென்ற நாய் சாராயம் மற்றும் கள்ளு போன்றவற்றினை காட்டிக்கொடுத்தது.இதனுடன் தொடர்புடைய நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பார் உடைப்புக்கும் குறித்த சந்தேக நபர்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்; விற்பனைசெய்வதற்காகவே மதுபான போத்தல்களை கொள்வனவு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.எது எவ்வாறான போதிலும் பொலிஸ் மோப்பநாய் குறித்த சந்தேகநபர்களின் வீடுகளுக்கு சரியாக மதுபானபோத்தல்களை இணங்கண்டதால் பொலிஸார் மத்தியில் பல்வேறு ஏற்படுத்தியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -