12ஆம் கொளனி, 3ம்வட்டாரம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு



எம்.எம்.ஜபீர்-

12
ஆம் கொளனி, சாளம்பைக்கேணி-04, 3ம் வட்டாரம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சாளம்பைக்கேணி-04 கிராமசேவகர் பிரிலுள்ள சகல குடும்பங்பகளும் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.எம்.விஜயசிங்க, நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

இவ்உலர் உணவு பொதிகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக்(ஜவாத்) அவர்களின் அணுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -