கே.சுந்தரலிங்கம் -
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்த இளைஞர் யுவதிகள் , ஓய்வுபெற்று எவருடைய உதவியும் இன்றி இருப்பவர்கள் , கொழும்பில் இருந்து வருகைதந்து வேலையிழந்து இருக்கும் காசல்ரீ ஒஸ்போன் மேல்பிரிவு , கீழ்ப்பிரிவைச் சேர்ந்த சுமார் 195 பேருக்கு 5000 ரூபா வீதம் இன்று 975000 ரூபா வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த தோட்டத்தில் ஏற்கனவே சமூர்த்தி கொடுப்பனவுகள் , முதியோர் கொடுப்பனவுகள், நோயாளர் கொடுப்பனவுகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்தே இந்த கொடுப்பனவுகளை பெறத்தகுதியிருந்தும் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கே இன்றைய இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக கிராமசேவக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி உட்பட ,உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்காக இராணுவப்பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்