நாட்டில் நிலவும் கோவிட்-19 இடர்நிலை காரணமாக அன்றாடம் கஷ்ட நிலையில் வாழும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மற்றும் புனித ரமழானை முன்னிட்டு கல்முனையன்ஸ் போரத்தினால் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியில் நிவாரண உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தனவந்தர்களின் நிதியுதவி பங்களிப்புடன் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக உணவுப்பொதிகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக இவ் உணவுப்பொதிகள் விநியோகத்திற்காக மொத்தமாக 1.1 மில்லியன் ரூபா பெறுமதியில் 565 குடும்பங்களுக்கு இதுவரையும் கல்முனையன்ஸ் போரத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.