சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்பூட்டும் வேலைத்திட்டம்

எம்.எம்.ஜபீர்-
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சம்மாந்துறை பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாட்டில் அமுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தளர்தப்பட்டதைத் தொடர்ந்து சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பொது மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தினை இன்று முன்னெடுத்தனர்.

சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபீர் தலைமையில் நடைபெற்றஇவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொரோனா வைரஸ் என்றால் என்ன, வைரஸ் பரவும் முறை, அதனால் ஏற்படும் பாதிப்பு, வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்கள் தொடர்பாக பொது மக்கனை விழிப்பூட்டும் நோக்கில் ஒலிபெருக்கி மற்றும் துண்டுபிரசும் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு செய்யப்பட்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -